யாழ்ப்பாணம் பலகலைக் கழகத்தின் வேந்தராக முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய பாலசுந்தரம்பிள்ளையை நியமிக்குமாறு சீனத் தூதரகம் இலங்கை ஜனாதிபதிக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதியுள்ளது என அறியப்படுகின்றது.
உள்ளூர் நிர்வாகத்தில் சீனத் தூதரகத்தின் நேரடி ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடாக சீனத் தூதரகத்தின் கடிதம் அமைகின்றது.
பல பதவிகளிற்கும் முக்கிய விடயங்களிலும் சீன தலையீடு செய வதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஓர் ஆவணம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கடிதத்தின் ஆங்கில மூலப் பிரதி இங்கு காணப்படுகின்றது.
இந்த விடயமானது அண்மைக்காலமாக சீனா இலங்கையின் பொது நிர்வாக மற்றும் உயர் கல்வி பீடங்களின் நிர்வாக விடயங்களில் தனது ‘மூக்கை’ நுளைக்கின்றது என்பதற்கு நல்ல உதாரணமாக விளங்குகின்றது