சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் வரி வெளியாகி வரவேற்பை பெற்றது. ‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது. படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
