பு.கஜிந்தன்
வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில்அமர்வோருக்குஉடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி நகரசபையோ அன்றி இலங்கைப் போக்குவரத்துச் சபையோ அக்கறை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வினயமாகக் கேட்கின்றனர்