முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.