இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் வெளியான ‘பதான், ஜவான்’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது இவர் ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தென்னிந்திய இயக்குனரான அட்லீயை தொடர்ந்து, மீண்டும் ஒரு தென்னிந்திய இயக்குனருடன் இணைய உள்ளார். தென்னிந்திய படங்கள் கடந்த சில வருடங்களாக இந்தியிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அதனால் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்தியில் வாய்ப்புகளும் அதிகம் வர தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி இவர்களது கூட்டணி உருவானால் அதில் ஷாருக்கான் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
