ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ‘சிவ மனசுல சக்தி’ திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷின் இரண்டாவது படமாகும். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஆர்யா – சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக இது அமைந்தது. தல தளபதி சலூன்கடை ஓனராக வந்த சந்தானத்தின் நகைச்சுவை வொர்க் அவுட்டானது. குறிப்பாக ஆர்யா – சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. படத்தின் மிகப்பெரும் தூணாக இந்த காமெடி ட்ராக் அமைந்தது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம் கோடை காலத்தில் மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
