நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அஸ்திரம்.” இந்தப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு 30 வயதுடைய ஒரு நபர் கொடைக்கானலில் தன்னை தானெ கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறார் இந்த காட்சி காணொளியில் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
