தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. ‘எம்புரான்’ திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், அத்திரைப்படம் வெற்றி பெற வேண்டி மோகன்லால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
