தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு
16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘ ‘ வரவேற்பு மண்டபத்தில் கனடாவின் ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நிறுவனம் நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
மேற்படி நிகழ்விற்கு பத்திரிகையின் ஆசிரியரும் ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூலை எழுதியவருமான கலாநிதி ஏ. எம். எம். பகாத் தலைமைதாங்கினார்.
மேற்படி விழாவில் கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உபு தலைவர்களில் ஒருவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும்’ யுகம்’ வானொலி நிலையத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பெற்றன.
அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் மற்றும் கலை இலக்கிய. வர்த்தக நண்பர்கள் என பலர் கலந்த சிறப்பித்தனர்.
மேற்படி ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழாவின் ஆரம்பத்தில் அது ஒரு அமைதியான கருத்தரங்காக அமையும் என்று எதிர்பார்த்திருக்க மேற்படி ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் பற்றி விமர்சனத்தை ஆங்கிலத்தில் வழங்கிய சட்டத்தரணி பிரசன்னா பத்திராஜ அவர்களின் மேற்படி நூல் பற்றியும் அதற்கு மேலாக வெளியே சென்று எவ்வாறு இலங்கையின் முதலாளித்துவ. இனவாத மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கு கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் வதைமுகாம்களை இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியோரது ஆதரவோடு நடத்தி அவற்றுள்ள தமிழ். சிங்கள. இஸ்லாமிய சமூகங்களில் அரச பயங்கரவாதத்தின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடுகின்ற மற்றும் குரல் கொடுக்கின்ற பட்டதாரிகள். மாணவர்கள்.
அரசியல் செயற்பாட்டாளர்கள். மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற சட்டத்தரணிகள் என பல்வேறு தரப்பினரையும் கைது செய்து. வதை முகாம்களின் அடைத்து வைத்து சித்திரவதை செய்தல். கண்களைப் பிடுங்குதல்.
பெண்களை மானபங்கப்படுத்தல். கொலை செய்தல் போன்ற பாதகங்களை கூசாமால் செய்தார்கள் என்றும் மேலும் இலங்கையில் வாழும் இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தி இனக்கலவரங்களை உண்டாக்கி அதன்போது சாதாரண மக்களே தொழிலாளர் விவசாயிகள் இனரீதியாக மோதிக்கொள்ளும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள் என்பதை விரிவாக எடுத்துரைத்து அன்று வெளியிடப்பெற்ற கலாநிதி ஏ. எம். எம். பகாத் எழுதிய Targeting Muslims in Sri Lanka என்னும் நூலின் அவசியத்தை விளங்கவைத்தார். அந்த உரைநிகழும் போது சபையில் அமைதி நிலவிய வண்ணம் சட்டத்தரணியின் உரையை வெளியே உள்ள ஆயிரக்கணக்கானவர்களும் பார்த்தும் கேட்டும் மகிழ யுகம் வானொலி கிருஸ்ணா லைப் ஊடகம்- தமிழ் ஆரம் ஊடகம்- ஜிரிஏ கெங்கா ஊடகம் பிகைன்ட் மீ இன்டர்நேசனல் ஊடகம் ஆகியவற்றின் ஊடகங்கள் வழி செய்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்படி விழாவில் கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும்’ யுகம்’ வானொலி நிலையத்தின் அதிபர் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் கனடா ‘ஈழமுரசு’ பத்திரிகையின் நிறுவனர் கண்ணன் மற்றும் பிரான்ஸ் தேசத்திலிருந்து அழைக்கப்பெற்றிருந்த ஊடகவியலாளர் திரு குருபரன் நாகேஸ்வரன் ஆகிய அர்ப்பணிப்புக்கள் நிறைந்த ஊடகவியலாளர்கள் என்ற விருதுகளும் வழங்கப்பெற்றன
அத்துடன் மேற்படி புதிய குரல் இணையவழிப் பத்திரிகை நடத்திய அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பல தகவல்களை கேட்டுத் தெளிந்து கொண்டவர்களாகவும் ஊடகங்களின் அவசியம் பற்றி அறிந்து கொண்டவர்களாகவும் அத்துடன் தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகள நடத்திய ரணில்.
மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாசஆகியோரின் கொலை வெறி தொடர்பான கொடுமையான மனப்போக்கு ஆகியவற்றை தெளிவுபடுத்தும் ஒரு விழாவாக விளங்கியது. அத்தடன் தென்னிலங்கையில் இஸ்லாமிய மக்களின் வர்த்தக மற்றும் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை கண்டு கலக்கமடைந்து இனவாதப் போக்கை அந்தப் பகுதிகளின் தூண்டிய ஏனைய அரசியல்வாதிகளின் மனப்பாங்கு ஆகியவற்றை அறியக் கூடிய ஒரு கருத்தரங்காக விளங்கியது என்றால் அது மிகையாகாது.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்