தனது அரசியல் பயணத்தை மார்க்கம் நகரசபை அங்கத்தவராக 2012ம் ஆண்டு வெற்றிகரமாக ஆரம்பித்த தற்போதைய ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் மார்க்கம் நகர சபையில் எவ்வாறு 3 காலப்பகுதிகளின் 7ம் வட்டார அங்கத்தவராகப் பணியாற்றினாரோ, அதே போன்று தற்போது ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திலும் தனது 3வது காலப் பகுதியை அதுவும் ஆளும் கட்சி உறுப்பினராக ஆரம்பிக்கும் வகையில் 20 -03.2025 வியாழக்கிழமையன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாண அரசின் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினராக மூன்று காலப் பகுதியிலும் அதேவேளை கடந்த பாராளுமன்ற ஆட்சிக் காலப்பகுதியில் இரண்டு அமைச்சுக்களின் பாராளுமன்ற உதவியாளராகவும் விளங்கினார் லோகன் கணபதி அவர்கள்
வியாழக்கிழமை அன்று தான் மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற போது. உலகப் பொதுமறையாம் ‘திருக்குறள்’ மீது பதவியேற்பு உறுதிமொழி எடுத்து தனது மாகாணஅரசு உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இவர், 2018ஆம் ஆண்டு ஒன்ராறியோ மாகாண அரசின் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினராகவும் பின்னர் . , மீண்டும் 2022ஆம் ஆண்டு பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அதே பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தனது மூன்றாவது காலப்பகுதியை ஆரம்பித்து மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாண அரசு உறுப்பினராக பணியாற்றவுள்ளார்.
இங்கே காணப்படும் படங்களில் ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமனறமான ‘குயின்ஸ்பார்க்’ கில் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரோடும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்