சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன்’ படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது. படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னோட்டம் வெளியாகி 12 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
