Markham Thornhill. எம்பி மேரி இங் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இங்கிலாந்தின் 3வது மன்னர் சார்ள்ஸ் முடிசூட்டுப் பதக்கம் வழங்கும் வைபவம்
Markham Thornhill. தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மேரி இங் அவர்களது ஏற்பாட்டில் இங்கிலாந்து தேசத்தின் 3வது மன்னர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டு விழாவைக் குறித்த பதக்கம் வழங்கும் வைபவம் 19-03-2025 புதன்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.
மார்க்கம் நகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த அரச வைபவத்தில் முக்கிய
உரையை பாராளுமன்ற உறுப்பினர் மேரி இங் அவர்கள் ஆற்றினார்கள்.
அதில் இவ்வாறான சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பெடுவதன் நோக்கம் மற்றும் யார் யாரெல்லாம் இந்தப் பதக்கத்தை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் போன்ற விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு முடிசூட்டுப் பதக்கங்கள் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர்கள் அனைவரும் தாங்கள் வாழும் நகரங்கள் அல்லது மாகாணத்தில் ஆற்றிய பொதுச் சேவைகள் போன்றவற்றை கணித்தே பதக்கங்கள் வழங்கப்பெறுகின்றன என்று குறிப்பிட்டார்.
அங்கு விசேட விருந்தினராக வருகை தந்த மார்க்கம் நகர சபையின் மேயர் பிராங் ஸ்கெப்பட்டி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மேரி இங் அவர்களது கடநத கால சேவையைப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் அவருக்கு மார்க்கம் நகரசபையின் சார்பில் வாழ்த்துப் பத்திரம் ஒன்றை வழங்கிக் கௌரவித்தார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து பதக்கங்களைப் பெற்ற 40 வெற்றியாளர்களில் நான்கு தமிழ் பேசும் அடங்கியிருந்தார்கள் அவர்கள் நால்வரும் கனடா வாழ் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1. மார்க்கம் கிறின்பொறோ முதியோர் நலன் பேணும் அமைப்பின் தலைவி திருமதி செல்வமணி அருள்ராஜசிங்கம்.
2. மார்க்கம் பொக்ஸ்குருவ் முதியோர் நலன் பேணும் அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா
3. பல சமூக சேவை அமைப்புக்களின் முக்கிய பங்கு வகிக்கும் திருஜேய் ஜெயகாந்தன்
4. சமூக சேவை அமைப்பான ‘மிஸ்டர் தமிழ்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சங்கர் பாலச்சந்திரன் ஆகியோரே மேற்படி இங்கிலாந்து தேசத்தின் 3வது மன்னர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டு விழாவைக் குறித்த பதக்கங்கள் பெற்ற தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆவார்கள்.
கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் Behind Me International Media ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஆகியோர் அங்கு அழைக்கப்பட்டவர்களாக கலந்து கொண்டார்கள்.
செய்தியும் படங்களும் : சத்தியன்