பு.கஜிந்தன்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடல்வழி போக்குவரத்து ஊடாக மேற்கொள்ளப்பட்ட திருவிழா ஒழுங்கமைப்பிற்கும் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய நெடுந்தீவு பிரேதச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்துகின்ற செயற்பாடாக இது அமையும் எனவும், அந்தவகையில் நெந்தீவு பிரதேச செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் கடற்படையிரின் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்திருந்தனையும் குறிப்பிட்டதுடன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு பிரதேச சபையினர், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பிற்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
மேலும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பிற்கும் தமது நன்றியினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் அலுவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.