மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது. இதன்படி அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தலைவர்களின் பெயர் பலகை இடம்பெற்றுள்ளது. மேலும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் பொழிப்பெயர்ப்பு செய்ய மொழிபெயர்ப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது.