அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. தற்போதைய பட்ஜெட், தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான். திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
