“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன சிஜிஐ உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது. திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழரின் மகத்துவத்தையும், தமிழரின் மருத்துவத்தையும் எப்படி ஆங்கிலேயர் அழித்தன என்பதை ஒரு ஹாரர் ஜானரில் கதைக்களத்தை அமைத்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
