தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
