தமிழகத்தில் 10 காவல் அதிகாரிகள் பணியிட் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
