வவுனியா கற்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளான தேக்கந்தோட்டம் பகுதிகளில் 24-03-2025 அன்று மாலை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டருந்தனர்.
குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்தில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்யும் நோக்குடன் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இவ் நடவடிக்கையில்
சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன்,குடியிருப்பு பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.