தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ‘அய்லா அலேலா’ பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
