பு.கஜிந்தன்
யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இருந்து 26ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் கவனயீரப்புபோராட்டம் ஒன்றில் ஈடுபட்டு பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட பொழுது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு எனும் தொனிப்பொருளில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
நியாயமற்ற தேர்வு பரிட்சை முறையை உடனடியாக நிறுத்து , ஆட்சி மாறியது போல பட்டதாரிகளின் வாழ்க்கை மாறுமா , நியாயமற்ற தேர்வு பரிட்சையால் கேள்விக்குறியாகப்பட்டதாரிகளின் கனவு , தாதியர் பட்டதாரிகளை உடனடியாக அரச சேவைக்கு அமர்த்து , மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான பட்டதாரிகளை உடனடியாக வேலைக்கு அமர்த்து ஆகிய கோஷங்களை அனுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் போலீஸ் நிலையங்களிலிருந்து அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது .
தொடர்ந்து கருத்து தெரிவித்த இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் கிஸ்னுயன் பின்வருமாறு தெரிவித்தார் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து தாதியியல் , மருந்தாக்கவியல் ,மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானம் , ஆகிய பதவி நிலை வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்களை உள்ளீர்ப்பதற்காக அரச பல்கலைக்கழகங்களில் முன்னபோதும் இல்லாத வகையில் பொது உளர் சார்பு பரீட்சை இணை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது . இந்தப் பரீட்சை எமக்கு தேவையற்ற ஒன்று எனவும் நான்கு வருடங்கள் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற எமக்கு வேலை வாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் இவ்வாறான தடை தாண்டல் பரீட்சைகள் எங்களுடைய தகுதியை தீர்மானிப்பதாக அமையவில்லை மேலும் இதுவரை காலமும் பாடப்பெறுமதிக்கான தரப்புள்ளி சுட்டெண் ( GPA) இன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகம் மூலம் பதவி நிலை வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஆனால் தற்பொழுது ஜிபிஏ சுட்டங்களை கொண்டிருக்காத தகுதியற்றவர்கள் கூட வேலை வாய்ப்பு இணைத்துக்கொள்ளப்படலாம் ஆகவே இது நிறுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
இதேவேளை பொலிஸ் புலனாய்வாளர்கள் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த பகுதிக்கு விரைந்து போராட்ட களத்தை நோட்டமிட்டு சென்றமையை அவதானிக்க முடிந்தது.