50 ஆண்டுகளுக்கு மேலாக நாவல் மற்றும் சிறுகதை இலக்கிய வடிவங்களைப் படைக்கும் ஒருவராக பயணித்து வரும் எழுத்தாளர் ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
19-04-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு ஓயாது எழுதும் அன்னாரது கரங்களைப் பற்றி எமது அன்பையும் ஆதரவையும் வழங்குவோமாக!