(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் 26ம் திகதி புதன்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனா.;
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் வந்து தங்கியுள்ள நிலையில் படுக்கையறையில் இரவு நித்திரைக்கு சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்புபோதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்