உக்ரைன் தேசமானது நன்கு வளர்ச்சியடைந்த ஒன்றாக விளங்கியது. உற்பத்தியில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளிற்கு தேவையான வைத்தியர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கின்கொண்டிருந்த ஒரு ‘மூளைகள்’ நிறைந்த ஒரு அரசியல் பொக்கிசம். அந்த தேசத்தின் மீதான தொடரும் ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்வதில் மிகப்பெரிய சவால்களை உக்ரேன் சந்திக்கிறது. போர்க்களத்தில் மட்டுமின்றி, அதன் நிதிசார்ந்த நெருக்கடி பெரிதான தாக்கங்;களை ஏற்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான உக்ரைன் அரசாங்கத்தின் பொருளாதார பற்றாக்குறை $37.2 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தனது இராணுவத்தை தற்போது விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை உக்ரைனுக்கு தோன்றியுள்ளது. எனவே ராணுவத்தை பராமரிக்க தேவையான நிதி கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஏனைய துறைகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை இராணுவத்துறையையும் பாதிக்கின்றது.
இன்னொரு பக்கத்தில் உக்ரைன் தேசத்தின் ஒட்டுமொத்த வருமானத்தின் 50 வீதத்திற்கு மேல் தரை தட்டியுள்ளதை அந்த தேசத்தின் நிதித்துறை அறிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) போர்க்கடமைகளுக்கான நிதியுதவியை வழங்குமாறு கேட்டுக்கொண்டு, உதவி கிடைக்காவிட்டால் உக்ரைனின் பாதுகாப்பு தகர்ந்து விடும் என எச்சரித்துள்ளார். ஆனால், €40 பில்லியன் மதிப்பிலான ஐரோப்பிய நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை, ஏனெனில் பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் தயக்கத்துடன் இருக்கின்றன.
இதேவேளை, உள்நாட்டிலேயே, உக்ரைன் நாடாளுமன்றம் ராணுவத்திற்கு பதிலாக அமைச்சக அதிகாரிகளின் சம்பளங்களை முன்னுரிமை அளித்துள்ளது, பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவை தொடர்ந்து வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, ஏனெனில் டொனால்டு டிரம்ப் மற்றும் விளாதிமிர் புதின் இடையே நடந்த (ceasefire) போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
போரின் தொடக்கத்தில் இருந்தபோதே, உக்ரைன் அதன் ராணுவத்தை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ராணுவ வீரர்களுக்கான சம்பளம், ஆயுதங்கள் மற்றும் போர் செயல்பாடுகளுக்கான நிதிச் செலவுகள் பெருகியுள்ளன. மேலும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவியில் சிக்கல் ஏற்படுத்தியதால், உக்ரைன் ஒரு ஆழ்ந்த நிதிசார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நெருக்கடியின் இடையிலும், உக்ரைன் நாடாளுமன்றம் ராணுவத்திற்கு நிதி ஒதுக்காமல், அமைச்சர்களின் சம்பளங்களை முன்னுரிமை அளித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கே மிக முக்கியமானது என ஜனாதிபதி செலென்ஸ்கி வலியுறுத்துகிறார். Time Magazine-இல் சமீபத்தில் பிரசுரமான ஒரு பேட்டியில், உக்ரைனின் எதிர்காலம் மேற்கத்திய நாடுகளின் உதவியினைச் சார்ந்தே உள்ளது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் €40 பில்லியன் மதிப்பிலான உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது, ஆனால் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஹங்கேரி இதை ஒப்புக்கொள்ள தயங்குகின்றன. குறிப்பாக, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பான், ரஷ்யாவுடனான உறவுகளை அதிகப்படுத்த விரும்புவதால், உக்ரைனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்து வருகின்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தாமதமாகவோ, குறைவாகவோ வழங்கப்பட்டால், உக்ரைன் மிகப்பெரிய ராணுவ தோல்வியை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக, ரஷ்யா மேலும் பல பகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருந்த அமெரிக்காவின் நிலைமை தெளிவற்றதாக உள்ளது. ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்தாலும், டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா உக்ரைனை ஆதரிப்பதா அல்லது ஒரு சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்லுமா என்பது சந்தேகமாக உள்ளது.
டிரம்ப் மற்றும் புதின் இடையே நடந்த போர் நிறுத்தம் (ceasefire) பேச்சுவார்த்தைகள், உக்ரைனை ஒரு சமரசத்துக்கு கட்டாயப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும். இதனால், உக்ரைன் தன்னுடைய நிலப்பரப்பை முழுமையாகப் பாதுகாப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அமெரிக்காவின் நடுவராக செயல்படும் முயற்சியால், ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்காகவும் ஆற்றல் உள்கட்டமைப்பின்மீது தாக்குதலை நிறுத்துவதற்காகவும் தனிப்பட்ட ஒப்பந்தங்களில் உடன்பட்டுள்ளன. இது, 30 நாட்கள் காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓர் இடைக்கால யுத்தநிறைவு ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை அமைதிக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதினாலும், ரஷ்யா தனது பங்கேற்பை சில கடுமையான நிபந்தனைகளுடன் இணைத்துள்ளது. குறிப்பாக, அதன் வேளாண்மை மற்றும் நிதிச் சந்தைகளின் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உக்ரைன் அதனை கவனமாக அணுகி, ரஷ்யாவின் உண்மையான நோக்கம் சந்தேகத்திற்குரியது என்று தெரிவிக்கிறது. அதன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் திடீர் நிலைப்பாட்டில் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன், மாஸ்கோ இயல்பாக ஒரு போர்நிறைவு செய்ய விரும்புவதாக இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
உக்ரைன் தனது நிதிசார்ந்த பிரச்சினைகளால் திணறிக்கொண்டிருக்க, ரஷ்யா தனது இராணுவத்தையும், அரசியல் உள்நாட்டுப் பணிகளையும் பயன்படுத்தி மேம்பட்டு வருகிறது.
▪︎ ரஷ்யா மேலும் பல பகுதிகளை கைப்பற்றுவதற்கான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
▪︎ மேற்கத்திய நாடுகளில் ஊடகப் பிரச்சாரங்களை அதிகரித்து, உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய ஒற்றுமையை பிரிக்க முயல்கிறது.
▪︎ உக்ரைனுக்கான மேற்கத்திய உதவியை நிறுத்த வேண்டும் என்பதற்கான ரஷ்யா – சீனா கூட்டணியின் அழுத்தம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் இப்போது நேரத்துடனான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதை ஒரு தற்காப்பு யுத்தம் என்றே கூறவேண்டும். நிதி, ஆயுதங்கள், மற்றும் கூட்டாளிகள் இல்லாத நிலையில், உக்ரைன் போர்க்களத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க முடிந்தால் மட்டுமே அதன் நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா தங்களுடைய முடிவுகளை விரைவாக எடுக்காவிட்டால், உக்ரைன் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடலாம். இதன் விளைவாக, முழு ஐரோப்பியாவின் நிலைப்பாடு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.
அத்துடன், அமெரிக்கா சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஷ்ய வங்கிகளுக்கு SWIFT கணினி பரிமாற்ற முறையில் அணுகல் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் இதை ஆபத்தாகக் கருதி, ரஷ்யாவின் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்யும் முன் முனகல் செய்ய வேண்டாம் என எச்சரிக்கின்றன.
இச்செய்தி உலகளவில் முக்கியத்துவம் பெறும் நிலையில், யுத்தநிறைவு அமல்படுத்தப்படுமா அல்லது மேலும் கடுமையாகுமா என்பது உலக நாடுகள் கவனிக்கும் விஷயமாக உள்ளது.
ரஷ்யா இதனை தனது பங்கிற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுமா? உக்ரைன் இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றுமா? மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்குமா?
இதனைப் பொறுத்தே, ஐரோப்பாவின் எதிர்கால அமைதியும், மொத்தமாக இந்தப் போரின் முடிவும் தீர்மானிக்கப்படும்.
உக்ரைனின் தற்காப்பு யுத்தமானது இப்போது ரஷ்யா மட்டும் எதிர்க்கின்ற ஒரு போராக இல்லை, மேற்கத்திய நாடுகளின் முடிவெடுக்கும் தாமதமும், அரசியல் குழப்பங்களும் உக்ரைனின் எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறன.
உக்ரைன் ஒரு சுயாட்சிக் கொண்ட நாடாக தொடருமா? அல்லது ஒரு பெரிய அரசியல் சமரசத்தின் ஆளாகி விடுமா? இதற்கான பதில் இன்னும் எவருக்குமே கிடைக்கவில்லை!
ராம்சங்கர் சிவநாதன்