சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் தெற்கு சிரியாவில் உள்ள கோயாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேலிய படைகளால் குறிவைக்கப்பட்டபோது அவர்கள் சிரிய எல்லைக்குள் இருந்தார்களா என்பதை இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை. மேலும் தங்கள் ராணுவம் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இஸ்ரேலிய போர் விமானம் போராளிகளைத் தாக்கியதாகவும் அது கூறியது. உயிரிழப்புகள் குறித்து எந்த விவரங்களையும் அது வழங்கவில்லை, ஆனால் “தாக்குதல்கள் அடையாளம் காணப்பட்டன” என்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.
