தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ‘ஹிட் 3’ படத்தில் நானி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ படத்திலும் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய பதாகை வெளியாகி உள்ளது.
