கனடா மத்திய பாராளுமன்றத் தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் Markham – Stouffville தொகுதியில் நிற்கும் நிரான் ஜெயநேசன்
Former Detective attached to Toronto Police Service Mr. Niran Jayanesan, who is the Federal Candidate for Markham-Stouffville, hosted the Grand Opening Ceremony of his The Campaign Office on Sunday 23-03-2024.
எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் Markham – Stouffville தொகுதியில் நிற்கும் நிரான் ஜெயநேசன் அவர்கள் தமிழ் மக்களின் ஆதரவையும் ஏனைய பல்லின சமூகங்களின் ஆதரவை எதிர்பார்த்து அதைப் பெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 23-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்தின் திறப்பு விழா 5964 Main Street, Stouffville என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை உறுதி செய்தனர். கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு அழைக்கப்பெற்றிருந்தார்.
படங்களும் செய்தியும்:சத்தியன்