சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மார்ச் 28ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கால்நடைகள் விவசாய நிலங்களை அழிப்பது தொடர்பான விவாதம் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க முற்படும்போது கால்நடைகளின் உரிமையாளர்களால் தாம் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிசாரின் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு பொலிஸாரை தேடியவேளை வட்டுக்கோட்டை பொலிஸார் பிரசன்னமாகாமை தெரியவந்தது. இந்நிலையில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரை தன்னை வந்து சந்திக்குமாறு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, பிரதேச செயலர் கவிதா உதயகுமாருக்கு தெரிவித்தார்