அண்மையில் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னி நியமிக்கப்பெற்ற ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களை கௌரவிக்கும் முகமாக மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய நிர்வாகசபையின் பிரதிநிதிகள் மூவர் 29ம் திகதி சனிக்கிழமையன்று மொன்றியால் மாநகரிலிருந்து ஸ்காபுறோவிற்கு வந்திருந்தார்கள்.
அன்றைய தினம் நடைபெற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் தேர்தல் பிரச்சார அஞலுவலகத்தின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்ட அவர்கள் பின்னர் நீதி அமைச்சராகப் பதவியேற்றமை குறித்த பாராட்டு கேடயம் ஒன்றையும் வழங்கிக் கௌரவித்தனர்.
மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய நிர்வாகசபையின் பிரதிநிதிகளாகக் வருகை தந்திருந்த ஆலயத்தின் பிரதம குரு ஶ்ரீ ஐயா அவர்கள் மற்றும் ஆலயத்தின் இந்து பாடசாலையின் பொறுப்பாளர் வாகீசன் நடராஜா ஆகியோர் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களை மலர்மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.
மேற்படி வைபவத்தில் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்