ந.லோகதயாளன்.
தனுஷ்கோடி கடல்வழியாக இராமர் தீடைகள் நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜை மீண்டும் திருட்டுத் தனமாக முயன்றதனால் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா (U. S. A) மிஸ்ஸிஸ்ஸிப்பியை சேர்ந்த லுச்சிபர் எவெரிலவ், தனுஷ்கோடி வழியாக கடலில் இறங்கி ராமர் பாலம் வரையில் நீந்திச் செல்ல முயன்றதாக கடந்த 24 ஆம் திகதி தமிழக காவல்துறையினர் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அமெரிக்கப் பிரஜை ஆன்மீக பயணமாக உத்திரபிரதேசம் கும்பமேளாவிற்கு சென்று அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்ததாகவும் பின் கன்னியாகுமரி செல்ல இருப்பதாகவும் தெரிவித்திருந்தோடு அதன்போது தீடைகளை பார்க்க விருப்பப்பட்டதனாரேயே அந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறியதற்கு அமைய தனுஷ்கோடி கடல் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி எனவும் மீண்டும் அதில் நீந்த முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்து அவரை பொலிஸார் திருப்பி அனுப்பியிருந்தனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அதே அமெரிக்கப் பிரஜை இரகசியமான முறையில் மீண்டும் தனுஸ்கோடி வந்து இரகசியமான முறையில் கடலிற்கு செல்ல முற்பட்டபோது தமிழக பொலிசாரால் கைது செயப்பட்டதோடு விளக்க மறியலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.