காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், “காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போர், எமர்ஜென்சி மற்றும் மற்ற நெருக்கடியான நேரங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
1931 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பே, மகாத்மா காந்தி நமது உடல்நிலையை மதிப்பிடுவதற்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதுபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான பரிசோதனையாகும் எனக் கூறியிருந்தார்” என கார்கே தெரிவித்துள்ளார்.