தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி உள்ளது. படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டன. அதாவது பைரஸி என்ற இணைய தளத்தில் முழு படமும் எச்.டி வடிவில் லீக் ஆகி இருக்கிறது. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். ஆனாலும் திரையரங்கில் ‘சிக்கந்தர்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் இந்திய அளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதாவது, சல்மான் நடித்த படங்களிலேயே 2 நாட்களில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.
