சட்டசபையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதே நோக்கம். திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும். மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கோவையில் நூலகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
