சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது, “நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது. எனவே இங்கு சுரங்க பாதைகள் அமைத்து இரு அணைகளையும் ஒன்றாக ஆக்கினால் நெல்லை மாவட்ட மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்” என கோரிக்கை விடுத்தார். அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்” என கூறினார். உடனே நயினார் நாகேந்திரன் அதற்கு “நான் அனுமதி வாங்கி தருகிறேன்” என்று தெரிவித்தார்.
