மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார். மலையாளஇயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
இந்நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். அந்த பதாகையில் ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு முகத்தில் ரத்த காயங்களுடன் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்தபடி இருக்கின்றனர்.