1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார். இவர் கடந்த மாதம் 8-ந் தேதி லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அந்த வகையில், இளையராஜாவுக்கு நடிகர்கள் பாண்டியராஜன் மற்றும் அவரது மகன் பிரித்வி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
