மக்களுக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான விஞ்ஞான ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களை கனடாவின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி பின்பற்றுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கனடாவின் ‘நேசனல் ஒப்சேவர்’ என்னும் ஆங்கில செய்தி ஊடகம் எழுதியுள்ளது.
மேற்படிச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் நிர்வாகம் காலநிலை மாற்றம் முதல் தொற்றுநோய்கள் வரை அனைத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதால் கனடாவில் உள்ள விஞ்ஞானிகளும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களோடு இணைந்து ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபடும் கனேடிய பல்கலைக்கழகங்களும் மேற்படி திட்டங்களில் இணைந்து பணியாற்றும் பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் வருமானத்தை இழந்துள்ளதாகவும் அத்துடன் இந்த நிதிக் குறைப்பான மனித குலத்திற்கு விரோதமானது எனவும் மேற்படி கனடாவின் ‘நேசனல் ஒப்சேவர்’ என்னும் ஆங்கில செய்தி ஊடகம் எழுதியுள்ளது. – மேலும் எங்களுக்கு நிதி குறைந்து போவதால், அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள், அமெரிக்காவைப் போன்று இந்த நிதிக் குறைப்பு கனடாவிலும் மேற்கொள்ளப்படுமானால் பின்விளைவு பாதிப்பாக இருக்கும் என்றும் கனடிய பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விளைவு பின்வாங்கக்கூடும்.
பல கனேடிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணிக்கு நிதிஉதவிகளைப் பெறுவதற்காக அமெரிக்காவை நம்பியுள்ளனர், பெரும்பாலும் சர்வதேச திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அல்லது அமெரிக்க நிதியைப் பெறும் அமெரிக்க சகாக்களுடன் ஒத்துழைப்பதன் மூலம். கனடிய விஞஞானிகள் பயன்பெற்றனர். ஆனால் பதவியேற்ற சில வாரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடுகளை குறைத்துள்ளார், குறிப்பாக காலநிலை அல்லது பாலினம் போன்ற பாடங்களில் – அவர் இந்த வெட்டுக்களை அமுல்படுத்தியுள்ளார்.
இதே போன்று கனடாவின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே கடந்த வாரம் வெளியிடப்பட்ட பெடரல் கன்சர்வேடிவ்களின் கியூபெக் தளம், கனடிய பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் நிதியில் குறைப்புக்களை கொண்டுவர தீர்மானித்துளளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே கொன்சர்வேர்ட்டிவ் கடசியின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்-அவர்கள்-2010 களில் நடத்திய “விஞ்ஞானத்திற்கு எதிரான போர்” இந்த அறிவிப்பில் எதிரொலிக்கிறது என்றும் இது உலகளாவிய கண்டனத்தை ஈட்டியது என்றும் கனடாவின் ‘நேசனல் ஒப்சேவர்’ என்னும் ஆங்கில செய்தி ஊடகம் எழுதியுள்ளது