அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 2-வது பாடலான ‘காட் பிளஸ் யூ’ வெளியாகி வைரலானது. ஜி.வி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முன்னோட்டம் நேற்று இரவு வெளியானது. அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த ‘குட் பேட் அக்லி’ முன்னோட்டம் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
