வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை முதல்-அமைச்சர் பின்பற்றவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான பேச்சு இது. ஒரு மத்திய அமைச்சர் இப்படியா பேசுவது. ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் நடக்காது… ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு இதெல்லாம் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
