பு.கஜிந்தன்
யூபிலி ஆண்டை முன்னிட்டு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்படும் வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி பாடல் போட்டியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் கலைக்குழு 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
5ம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணியளவில் மன்னார் புனித வளனார் திருமறைப்பணி நிலையத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
தேசிய ரீதியாக பலர் பங்குபபெற்றிய குறித்த போட்டியில் வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் கலைக்குழு பசாம் மற்றும் ஒப்பாரி போட்டியில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்கள்
இவர்களுக்கான பரிசில்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.