நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தாதூன் மறுபதிப்பான அந்தகன் படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் மறு பிரவேசம் கொடுத்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இயக்குநர் ஹரி பிரசாந்த்-ன் தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஷாலின் ரத்னம் படம் மூலம் மற பிரவேசம் கொடுத்தார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பிரசாந்த்-ன் பிறந்த நாள் விழாவில், இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 23 ஆண்டுகளுக்கு பிற இருவரும் இணையும் இப்படம் பிரசாந்த்-ன் 55வது படமாக உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் பேசியபோது, “அப்பா எனக்கு பிரசாந்த் 55 என்ற மிகப்பெரிய பரிசு கொடுத்துள்ளார். இது சாதாரண பரிசு கிடையாது. ஹரியும் நானும் இணைந்து திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த படம் எதிர்பார்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும். தமிழ் படத்தை பார்த்து இப்போது பார்த்தும் நல்ல படம் என்று சொல்கிறீர்களோ அதே போல் இந்த படத்தில் நல்ல பாடல்கள், சண்டை காட்சிகள், கதை, ஸ்கிரீன் பிளே வேகமாக இருக்கும். எல்லோருக்கும் பிடித்த மாதிரி படம் அமையும்” இவ்வாறு நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
