ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அவர் 4 நாட்கள் பயணம் மேற்கொள் வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால் வான்சின் பயண திட்டம் பெரும்பாலும் தனிப்பட்டதாக இருக்கும் என்றனர். ஜே.டி.வான்ஸ் தனது குடும் பத்துடன் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு டில்லியில் பிரத மர் மோடி விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கிடையே இந்தியாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சமீபத்தில் இந்தியா மீது கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
