தமிழீழ விடுதலைக்குரலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் ஒலித்த குரல். கனடிய ‘மக்கள் சேவையாளர்’ பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இறைவனடி சேர்ந்தார்
கனேடிய புதிய குடிவரவாளர்களின் மேம்பாட்டிற்கு உழைத்த இந்த செயற்பாட்டாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார்
தள்ளாத வயதிலும் குளிரிலும் வெயிலிலும் போராட்ட களங்களில் தவறாது கலந்து கொண்டு பங்காற்றிய அருட்பணியாளர் ஆவார்.
அன்னார் மீளாத்துயில் கொண்டதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம்.
பன்முக செயல்வீரர், செயல் திறனும், தமிழ்ச் சமூகத்தின் தொண்டனுமாகிய அடிகளார் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 1984 இல் கனடாவில் கால்பதித்தார், அக்காலம் தொடக்கம் மக்கள் சேவையாற்றும் மகத்தான மனிதராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார் ஓய்வின்றி மக்களுக்காக உழைத்தார். கியூபேக் தமிழர் ஒன்றியத்தின் தலைவராகவும், செயலாளரகவும் தொண்டாற்றி றியது மட்டுமல்லாமல், தமிழர்கள் மத்தியில் உளவளத்துறையிலும் பங்கு கொண்டு செயலாற்றினார். ரொறன்ரோவிலும் முன்னாள் உலகத் தமிழர் இயக்கத்திலும் அங்கத்தவராகவும், பல துறைகளிலும் செய லாற்றி ஈழத்தமிழர் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படடவர். அன்னார் புகழுடல் பார்வைக்கு April 9ம் திகதி மாலை 4மணி தொடக்கம் 9 மணிவரை chapel Ridge Furnneral Home இறுதிச் சடங்குகள் நடைபெறும் மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்படும்