பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில், 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அரசுக்களுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஒற்றை இருக்கை கொண்ட 22 ரபேல் போர் விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட 4 ரபேல் போர் விமானங்கள் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்களை இந்திய கடற்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு இந்தியாவிற்கு வர உள்ள நிலையில், அப்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
