ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம். இப்படத்தில் ஐஷ்வர்யா ராய், தபு, மமூட்டி மற்றும் அபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலகளும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்று வரை அப்படத்தின் பாடல்கள் ரீல்ஸ்-இல் வலம்வருகிறது. திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை படக்குழு மறு வெளியீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
