இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நடனப் புயல் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும், இயக்குனராகவும் 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தமிழில் ஜாலி ஓ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதேபோல், தெலுங்கில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்திலும் நடித்துள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம் வருகிற மே இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கண்ணப்பா படக்குழுவினர் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
படக்குழவினருடன் லக்னோ சென்ற பிரபு தேவா அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு அவரிடம் இருந்து நினைவுப் பரிசுகைளை பெற்றுக் கொண்டார். மேலும், தனது வரவிருக்கும் படம் குறித்தும் முதல்வருடன் பகிர்ந்துக்கொண்டார்