26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பும் வெளியிடப்பெற்றமை பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வாக விளங்கியது
கனடாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவரும்பெண்கள் சார்ந்த அமைப்பான ‘கிராமத்து வதனம்’ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் அமைப்பு நடத்திய ‘உலக மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 6ம் திகதியன்று ஈற்றொபிக்கோ நகரில் அமைந்துள்ள Thistletown Community Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் 26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பும் வெளியிடப்பெற்றமை பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வாக விளங்கியது. அத்துடன் அன்றைய தினம் வதனன் காலாண்டு சஞ்சிகையின் ஜனவரி- மார்ச் மாதங்களுக்கான இதழ் வெளியிடப்பெற்றது.
மேற்படி விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தை ‘கிராமத்து வதனம்’ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் அமைப்பின் தலைவி கமலவதனா சுந்தர் அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து சிறப்பாக நடத்தியிருந்தார்.
பேராசிரியர் இ. பாலசுந்தரம். முனைவர் வாசுகி நகுலராஜா. முனைவர் பார்வதி கந்தசாமி. கவிஞர் அகணி சுரேஸ்.எழுத்தாளர் அகணி சுரேஸ் உட்பட பல கலை இலக்கியவாதிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஒன்றாரியோ மாகாண அரசின் பாராளுமன்ற உறுப்பினரும் இணையமைச்சருமான விஜேய் தணிகாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கலைஞர்களை பாராட்டிக் கௌரவித்தார்.
நீண்ட ஒரு கலைவிழாவாகவும் பெண்களை கொண்டாடும் நிகழ்வாகவும் விளங்கிய அன்றை மாலைப்பொழுது மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது என்றால் அது மிகையாகாது