கனடிய பெண்கள் கவுன்சில் வழங்கிய ‘Resonance-2025’ பல்சுவைக் கலை விழாவில் ஒன்றாரியோ அரசின் அமைச்சர்கள் கலந்து சிறப்பித்தனர்
கடந்த ஏப்ரல் 6ம் திகதி ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ‘Resonance-2025’ கலாச்சார விழாவை கனடிய பெண்கள் கவுன்சில் நடத்தியது. இந்த விழாவில் உள்ளுர் கலைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்கள் கலைத் திறமைகளை மேடையேற்றினர்.
கனடிய பெண்கள் கவுன்சில் அமைப்பின் தலைவி திருமதி க. ரோகிணி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனது அமைப்பின் சக அங்கத்தவர்களோடு இணைந்து சிறப்பாகச் செய்திருந்தார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஒன்றாரியோ மாகாண அரசின் முதியோர் நலன் பேணும் அமைச்சர் கௌரவ றேமண்ட் சோ அவர்கள் மற்றும் ஸ்காபுறோ அஜின் கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ அரசின் குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான அரிஸ் பாபிகியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் சார்பில அவரது பிரதிநிதி அங்கு கலந்து கொண்டு வாழ்த்து மடலை வழங்கிச் சென்றார்.
கனடிய பெண்கள் கவுன்சில் அமைப்பின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகித்த பெரியோர்களுக்கு அங்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பெற்றன.