வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் 3வது விற்பனை அலுவலகத்தின் திறப்பு விழா வசதிகள் பல நிறைந்த கட்டடத்தில் நடைபெற்றது.
‘ReMax Community Realty Inc Brokerage, என்னும் வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் 3வது பிரதான விற்பனை அலுவலகத்தின் திறப்பு விழா. கடந்த சனிக்கிழமைஇ 5ம் திகதி மதியம் 282, Consumers Road, Unit 10, North York என்னும் விலாசத்தில் அமைந்து வசதிகள் பல நிறைந்த கட்டடத்தில் நடைபெற்றது.
மேற்படி ‘ReMax Community Realty Inc Brokerage, நிறுவனத்தின் தலைவர் திரு ரஜீவ் கோணேஸ்வரன் திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.
அலுவலகத்தின் திறப்பு விழாவிற்கு மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நாடா வெட்டும் வைபவத்தில் அமைச்சரோடு ரஜீவ் கோணேஸ் அவர்களின் தந்தையார் திரு கோணேஸ்வரனும் இணைந்து அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.
மேற்படி சிறப்பான வைபவத்தில் நூற்றுக்கணக்கான ‘ReMax Community Realty Inc Brokerage, நிறுவனத்தின் வீடு விற்பனை முகவர்கள். வர்த்தகப் பிரமுகர்கள். மோட்கேஜ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
கனடா உதயன் பத்திரிகை சார்பில் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் அங்கு கலந்து கொண்டு திரு ரஜீவ் கோணேஸ்வரன் அவர்களை வாழ்த்தினார்..
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
படங்களும் செய்தியும்:- சத்தியன்