ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு சதியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். ராணுவத்தின் முயற்சியால் இந்த கலவரம் ஒடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 அமெரிக்கர்கள் உள்பட 37 பேருக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
இதற்கிடையே அமெரிக்கா-காங்கோ ஜனநாயக குடியரசு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து அமெரிக்க கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க அவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.